இண்டிபெண்டன்ஸ் டே ரிசர்ஜென்ஸ் – திரை விமர்சனம்

இண்டிபெண்டன்ஸ் டே ரிசர்ஜென்ஸ் – திரை விமர்சனம்

1996ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம் மட்டுமல்ல, உலகத்தை அழிக்க நினைத்த வேற்று கிரகவாசிகளின் தாக்குதலை அமெரிக்கா முறியடித்த தினம். சரியாக 20 வருடங்கள் கழித்து, மீண்டும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகிறது அமெரிக்கா. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுதந்திர தின உரையாற்றுவதற்காக தயாராகி வருகிறார் தற்போதைய ஜனாதிபதியான சீலா வார்டு. இந்த சூழ்நிலையில், நீண்ட வருடங்களாக உடல்நிலை சரியில்லாமலிருந்த பழைய ஜனாதிபதி பில் புல்மேனுக்கு மீண்டும் வேற்று கிரகவாசிகளின் தாக்குதல் நடக்கப்போவதாக உணர்கிறார். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் 3000 மைல் சுற்றளவு கொண்ட மிகப் பிரம்மாண்டமான விண்கலம் ஒன்று, உலகின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி தரையிறங்கி, பூமியின் மையப்பகுதியை துளையிடத் துவங்குகிறது. இதனால் இரண்டு மணி நேரத்தில் மொத்த உலகமும் அழியப்போகிறது என்ற அபாயத்தில் மக்கள் பரிதவிக்கிறார்கள். இறுதியில் இந்த பேராபத்தை அமெரிக்க ராணுவம் எப்படி முறியடிக்கிறது? இந்த முறை வேற்று கிரகவாசிகளின்

The post இண்டிபெண்டன்ஸ் டே ரிசர்ஜென்ஸ் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

இண்டிபெண்டன்ஸ் டே ரிசர்ஜென்ஸ் – திரை விமர்சனம்

விவசாயமும் சினிமாவும் அழிந்து வருகிறது: வசந்த பாலன் வருத்தம்

விவசாயமும் சினிமாவும் அழிந்து வருகிறது: வசந்த பாலன் வருத்தம்

கருணாஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பகிரி’. இதில் நாயகனாக பிரபு ரணவீரனும் நாயகியாக ஷர்வியாவும் நடித்துள்ளார்கள். இசக்கி கார்வண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘வாட்ஸ்அப்’ஐ மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷர்வியா, இயக்குனர் இசக்கி கார்வண்ணன், ரவிமரியா, வெங்கடேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக நமிதாவும், இயக்குனர் வசந்த பாலனும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் இசையை வெளியிட்டு பேசிய வசந்த பாலன், ‘‘பகிரி படத்தை விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். ஒரு விவசாயி தன்னுடைய மகன் மருத்துவராகவும், இன்ஜினீயராகவும் ஆக்காமல், விவசாயியாக ஆக்க முயற்சி செய்கிறார். ஆனால், மகனோ விவசாயம் செய்ய மறுக்கிறான். இதை படத்தின் கருவாக வைத்து இயக்கி இருக்கிறார். விவசாயம் அழிந்து வருவதை கூறியிருக்கிறார். ஆனால், தற்போதுள்ள தமிழ் சினிமாவில் சினிமாவே

The post விவசாயமும் சினிமாவும் அழிந்து வருகிறது: வசந்த பாலன் வருத்தம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

விவசாயமும் சினிமாவும் அழிந்து வருகிறது: வசந்த பாலன் வருத்தம்

திருமணத்துக்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் உருக்கம்

திருமணத்துக்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் உருக்கம்

சர்ச்சைக்கு பெயர் பெற்ற இந்தி நடிகர் சல்மான்கான், மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, போட்டியாளர்களில் ஒருவர் சல்மான்கானின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு சல்மான்கான் உருக்கமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:- நீங்கள் தவறான ஒரு நபரை இலக்காக வைத்து கேட்கிறீர்கள். திருமண விஷயத்தில் எப்போதுமே நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். இந்த விஷயத்தில் என் மீதான பொதுமக்களின் அணுகுமுறையும் முற்றிலும் தவறானது. சொல்லப்போனால், திருமணம் புரிவதற்காக நான் செத்து கொண்டிருக்கிறேன். திருமண விஷயத்தில் ஆண்கள் சொல்வதற்கு என்று எதுவுமில்லை. பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்களது முடிவுக்காக எப்போதும் நான் காத்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு சல்மான்கான் தெரிவித்தார். 50 வயது நடிகர் சல்மான்கானும், வெளிநாட்டை சேர்ந்த 35 வயதான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லூலியா வண்டூர் என்பவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். ஆனால், அவர்களது திருமணம் பற்றிய உறுதியான தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த

The post திருமணத்துக்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் உருக்கம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

திருமணத்துக்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் உருக்கம்

சந்திரமுகி 2 தலைப்பு மாறியது

சந்திரமுகி 2 தலைப்பு மாறியது

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’. இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இவர் சமீபத்தில் கன்னடத்தில் ‘சிவலிங்கா’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதை ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இயக்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது ‘சிவலிங்கா’ பெயரிலேயே தமிழில் படம் இயக்குவதாக பி.வாசு அறிவித்திருக்கிறார். ‘சிவலிங்கா’ படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் நடிக்கிறார். இவர்களுடன் மிக முக்கிய வேடத்தில் சந்திரமுகிக்கு பிறகு மீண்டும் பி.வாசுவுடன் இணைகிறார் வடிவேலு. மேலும் மிக முக்கிய வேடத்தில் ஷக்திவேல் வாசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான மிருதன் உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும்

The post சந்திரமுகி 2 தலைப்பு மாறியது appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

சந்திரமுகி 2 தலைப்பு மாறியது

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு

பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவர் தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். அரைகுறை ஆடையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதாக சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். சமீபத்தில் யோகா தினத்தையொட்டி கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிபாசா பாசு அழைக்கப்பட்டு இருந்தார். பிபாசா பாசு யோகா பயிற்சி பெற்றவர். தினமும் யோகா மற்றும் தியானம் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். சக நடிகைகளுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறார். எனவேதான அவரை பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தனர். பிபாசா பாசுவுடன் மாநில முதல்-மந்திரி சித்த ராமையாவும் யோகாவில் கலந்துகொண்டார். இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபாசா பாசுக்கு ரூ.1½ கோடி கொடுக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் பிபாசா பாசு பெங்களூரு வந்து செல்வதற்கான விமான பயணச்செலவை கர்நாடக அரசே ஏற்றுள்ளது. அவர் ஆடம்பர ஓட்டலில் தங்குவதற்கும் பெரிய செலவு செய்துள்ளனர். யோகா நிகழ்ச்சி சமூக

The post யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு

1 2 3