சூர்யாவின் பசங்க 2- படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

» Download This File
சூர்யாவின் பசங்க 2- படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் தலைப்பு முன்னதாக ‘ஹைக்கூ’ என்று வைக்கப்பட்டது. பின்னர், படத்தின் வரிவிலக்கிற்காக தற்போது ‘பசங்க-2’ என மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால் இணைந்து நடித்துள்ளார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தியே இப்படத்தை எடுத்திருப்பதால் இருவரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்திலேயே நடித்திருக்கின்றனர்.

» Download This File

இப்படத்தின் டீசரும், புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 17-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆரோல் கொரல்லி இசையமைத்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ‘பசங்க-2’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். பாண்டிராஜும் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

» Download This File