பசங்க-2 ஆக மாறிய ஹைக்கூ

» Download This File
பசங்க-2 ஆக மாறிய ஹைக்கூ

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய படம் ‘ஹைக்கூ’. இப்படத்தின் தலைப்பு சுத்தமான தமிழ் வார்த்தை இல்லை என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, படத்தின் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்தனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த ‘பசங்க’ படத்தைப் போன்று குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்படுவதால், இப்படத்திற்கு ‘பசங்க-2’ என்று தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, அந்த தலைப்பையே தற்போது இறுதியாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்த தலைப்புடன் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் வெளியிடவிருக்கின்றனர்.

» Download This File

இப்படத்தில் அமலாபால், பிந்து மாதவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யா தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார்.

» Download This File