விநாயகர் சதுர்த்திக்கு விருந்து வைக்க வரும் ஜி.வி.பிரகாஷ்

விநாயகர் சதுர்த்திக்கு விருந்து வைக்க வரும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் இவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ், ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப் 17-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அன்றைய தேதியில், கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘49 ஓ’ படமும், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயா’ படமும், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘10 எண்றதுக்குள்ள’ படமும் வெளியாகவுள்ளது. அந்த ரேசில் தற்போது இந்த படமும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.