நயன்தாரா-கவுடண்மணியுடன் இணைந்த விக்ரம்

நயன்தாரா-கவுடண்மணியுடன் இணைந்த விக்ரம்

வருகிற செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய ‘மாயா’ படம் வெளியாகவிருக்கிறது. திகில் நிறைந்த பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு போட்டியாக, கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘49 ஓ’ என்கிற படமும் அன்றைய தேதியிலேயே வெளிவரவிருக்கிறது.

இவ்விரண்டு படங்களும் செப் 17-ந் தேதி வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படமும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படமும் அன்றைய தேதியில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது, இவர்களை முந்திக் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை செப்டம்பர் 17-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விக்ரம் – சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். ‘கோலி சோடா’ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3