கவுண்டமணி புதிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்

» Download This File
கவுண்டமணி புதிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்

தமிழக ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்த கவுண்டமணி நீண்ட நாட்களாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். மீண்டும் அவர் ‘வாய்மை’, 49ஒ’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘49ஒ’ படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

» Download This File

டைரக்டர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகி இருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமான இது சில மாதங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ‘49–ஒ’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது கவுண்டமணியின் இந்த படத்தை அடுத்த மாதம் திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

» Download This File