தீபாவளிக்கு கமல்ஹாசன் – அஜித்குமார் படங்கள் வெளியாகின்றன

» Download This File
தீபாவளிக்கு கமல்ஹாசன் - அஜித்குமார் படங்கள் வெளியாகின்றன

 பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களை திரையிடுவது என்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் பட அதிபர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி தீபாவளிக்கு என்னென்ன பெரிய படங்கள் வரும் என்று ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்,’ அஜித்குமாரின் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளியாவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ‘தூங்காவனம்’ படத்தில் கமல்ஹாசன்-திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ராஜேஷ் எம். செல்வா டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை ஸ்டூடியோக்களிலும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும் நடந்து முடிந்துள்ளது.

» Download This File

வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மர்மங்கள் நிறைந்த திகில் படமாக தூங்காவனம் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் வருகிறது. இதன் பாடல் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

‘வேதாளம்’ படத்தில் அஜித்குமார்-சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ளனர். அஜித்குமார் தங்கை வேடத்தில் லட்சுமிமேனன் வருகிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. மீண்டும் ‘வேதாளம்’ படத்தில் இணைந்துள்ளதால் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வேதாளம்’ குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி படமாக தயாராகியுள்ளது. இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. ‘தூங்காவனம்’ மற்றும் ‘வேதாளம்’ படங்களுக்கான குரல் பதிவு, இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கமல்ஹாசன், அஜித்குமார் ரசிகர்கள் தீபாவளியை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

» Download This File
1 2 3 6