அனிருத் பிறந்தநாளில் விஐபி-2 பர்ஸ்ட் லுக்?

அனிருத் பிறந்தநாளில் விஐபி-2 பர்ஸ்ட் லுக்?

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அமலாபால், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த படக்குழு மீண்டும் இணைந்து ‘விஐபி-2’ என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளது. இப்படத்தில் தனுஷே நாயகனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆனால், நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், தனுஷின் அப்பா, அம்மாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலேயே உள்ளது. ஆகையால், விரைவில் படத்தின் தலைப்பை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வருகிற அக்டோபர் 16-ந் தேதி அனிருத் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிடுவார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விஐவி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதுவரை பொறுமையாக காத்திருந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.