திருநாளை முடித்த ஜீவா-நயன்தாரா

» Download This File
திருநாளை முடித்த ஜீவா-நயன்தாரா

‘ஈ’ படத்திற்கு பிறகு ஜீவாவும்-நயன்தாராவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடியாக நடித்து வரும் படம் ‘திருநாள்’. இப்படத்தை ‘அம்பாசமுத்திரத்தில் அம்பானி’ படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.கும்பகோணத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடிக்கிறார். நயன்தாரா டீச்சராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.

இறுதிநாள் படப்பிடிப்பின்போது, ஜீவாவும், நயன்தாராவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், ஜீவா சட்டையில் ரத்தக்கறையுடன் அமர்ந்திருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது, கடைசி நாள் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியை படம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகை மீனாட்சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியநாடு படத்தில் வில்லனாக நடித்த சரத் யோகித் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

» Download This File

இதுதவிர, நயன்தார நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நயன்தாரா நடித்துள்ள ‘மாயா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

» Download This File