அஜித்துடன் சண்டைக்கு தயாராகும் கபீர் சிங் | Kabir Singh ready to fight with Ajith

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க பல பேரை தேடி வந்தனர். மிகவும் முக்கியத்துவம் உள்ள இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு கபீர் சிங் தற்போது தேர்வாகியுள்ளார்.

கபீர் சிங் ஒரு தெலுங்கு நடிகர். சமீபத்தில் வெளியான ‘ஜில்’ தெலுங்கு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் வெற்றி பெற்ற ‘சுந்தர பாண்டியன்’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் கபீர் சிங் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருடைய வில்லத்தனமான நடிப்பு தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதுபோல் அஜித் படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. கபீர் சிங் ஜூன் மாத படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.