பிக்கு படத்திற்காக தீபிகா படுகோனை படாத பாடு படுத்திய அமிதாப் | bikku film Deepika B Amitabh execution-style slaying

ஏற்கனவே பிகு படத்தின் டிரைலர் யூ டியூபில் 40 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டு ’டாக் ஆப் தி பாலிவுட்’ ஆக இருக்கும் நேரத்தில் தற்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் பாலிவுட்டின் எவர்கிரீன் தாதா அமிதாப்.

”தீ’பிகு’ நல்ல பொண்ணு (சில நேரங்களில் மட்டும்)” என்று கிண்டலாக ட்வீட் செய்து அதனுடன் பிகு(தீபிகா படுகோன்) தனது தோளில் மீது அன்புடன் கைபோட்டிருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

90 வயது அப்பாவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு இளம் மகளைப் பற்றிய படம் தான் ’பிகு’. ஆனால் படத்தின் டிரைலரைப் பார்த்தாலே நான் ஸ்டாப் சிரிப்பால் வயிறு வலிக்கிறது.

வயதானவர்களுக்கே உண்டான வயிற்றுப் பிரச்சனை கொண்ட அமிதாப் தனது சின்ன சின்ன தேவைகளுக்காகவும் தீபிகா படுகோனை படுத்தும் பாடு, இடையில் இர்பான் கானும் சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டுகிறது.

சாம்பிளுக்கு ஒரு காட்சி

இர்பான் : எப்போ கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்க (கரெக்ட் செய்து கல்யாணம் பண்ணும் ஆசையில்)

தீபிகா : உனக்குதான் தெரியுமே என் அப்பா என்னை எல்லாத்துக்கும் எதிர்பார்க்குறார். அதனால…

இர்பான் : என்ன வரப் போறவ உன்னோட சேர்த்து ஒரு 90 வயசு குழந்தையையும் தத்தெடுக்கனும்.. கரெக்டா?

தீபிகா : ஆமா நீ என்ன கல்யானம் பன்னிக்கிறியா

இர்பான் : எனக்கென்ன பைத்தியமா?

மே 8-ம் தேதி இந்த திரைப்படத்தை தியேட்டரில் கண்டுகளிக்கலாம்….