எந்திரன் பட அறிவிப்பு: மழையால் தாமதம்

எந்திரன் பட அறிவிப்பு: மழையால் தாமதம்

ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தாய்லாந்திலும் படப்பிடிப்பு நடந்தது.

தற்போது ‘கபாலி’ படப்பிடிப்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்துக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் டைக்டர் ரஞ்சித் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், ‘எந்திரன் – 2’ படத்துக்கான பணிகளில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இதற்காக ரஜினியும் அவருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரஜினிக்கான மேக்கப் ‘டெஸ்ட்’ நடந்து வருகிறது. இதில் ஹாலிவுட் மேக்கப் நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

எந்திரன் – 2 படத்துக்கான கிராபிக்ஸ் மற்றும தொழில் நுட்ப பணிகள் நடைபெற இருக்கும் ஸ்டூடியோக்களையும் ரஜினி பார்வையிடுகிறார்.

டிசம்பர் 12–ந் தேதி ரஜினியின் 65–வது பிறந்த நாள் அன்றைய தினத்தில் ‘எந்திரன் – 2’ படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட ஷங்கர் திட்டமிட்டிருந்தார்.

தற்போது பலத்த மழை வெள்ளம் காரணமாக சென்னை நகரம் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. எனவே ‘எந்திரன் – 2’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 18–ந் தேதி படத்தின் தொடக்க விழாவும் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.