ஒத்தெல்லோவின் வில்லனாக மாறும் ஜேம்ஸ்பாண்ட்

» Download This File
ஒத்தெல்லோவின் வில்லனாக மாறும் ஜேம்ஸ்பாண்ட்
நியூயார்க், அக். 20-

ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகமான ஒத்தெல்லோவில் ஜேம்ஸ்பாண்ட் புகழ் டேனியல் க்ரேய்க் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

» Download This File

பிரிட்டன் நடிகரான டேனியல் க்ரேய்க், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உட்பட ஹாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். அடுத்த ஆண்டு வரவிருக்கும் இலையுதிர்காலத்தின்போது (மார்ச், ஏப்ரல், மே) இந்த நாடகத்தில் நடிப்பதற்காக பயிற்சி மேற்கொள்வார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நாடகத்தை நியூயார்க் அரங்கத்துக்காக டேனியல் நடிக்க இருக்கின்றார். இந்த நாடகம் நடக்க உள்ள தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த நாடகம் வெறும் நூற்று தொன்னூற்றொன்பது பேர் மட்டுமே அமரும் வகையான சிறிய அரங்கில் நடத்தப்பட இருக்கின்றது.

இதில் மற்றொரு பிரபல பிரிட்டைன் நடிகரான டேவிட் ஒயிலாவோ ஒத்தெல்லோ கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

» Download This File
1 2