பகல் கனவு காண பிடிக்காது: சுருதிஹாசன்

பகல் கனவு காண பிடிக்காது: சுருதிஹாசன்

உங்களுக்கு பிடித்தமான வேடம் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காண்பீர்களா? என்று சுருதிஹாசனிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்–

சிலர் விழித்துக்கொண்டே தூங்குகிறார்கள். அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது பற்றி கனவு காண்கிறார்கள். எனக்கு இது போல் பகல் கனவு காண பிடிக்காது.

வாழ்க்கையில் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கிடைக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன். கதைக்கு ஏற்ற பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.

எனக்கு இந்த பாத்திரம் தான் வேண்டும் என்று கனவு காண்பது இல்லை. இன்று அற்புதமான பாத்திரம் என்று கனவு கண்டால், நாளை அது சாதாரணமாகி விடலாம். எனவே எது கிடைக்கிறதோ அதையே சிறந்ததாக கருதுகிறேன். என்னை நம்பி கொடுக்கும் பாத்திரங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் முழு அக்கறை காட்டுகிறேன்.

இதனால்தான் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது. அடுத்து நடிக்கும் படங்களிலும் எனக்கு பொருத்தமான வேடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் முழு கவனம் செலுத்துவேன். இல்லாததைப் பற்றி கவலைப்படமாட்டேன்.