விஜய்யின் தந்தை இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

» Download This File

» Download This File

விஜய்யின் 59வது படத்தை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் தந்தை இயக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனரும், இளையதளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது இதுதான் தனது கடைசி படம் என்றும் இனிமேல் படங்களை இயக்க மாட்டேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது ‘நையப்புடை’ என்ற படத்தை எஸ்.ஏ.சி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பா.விஜய் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் எஸ்.ஏ.சியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ரஜினி, விஜய் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தாணு, இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

» Download This File
1 2 3 8