அனிருத்துக்கு பிறந்தநாள் பரிசளித்த சங்கர்

அனிருத்துக்கு பிறந்தநாள் பரிசளித்த சங்கர்

 தற்போது இளைஞர்களின் இசையமைப்பாளர் என்று கூறப்படும் அனிருத், தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இவருடைய பிறந்த நாளான இன்று அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் பாராட்டு மழைகள் குவிந்து வருகிறது. இன்னொரு பக்கம் இவர் இசையில் சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்களை கேட்ட இயக்குனர் சங்கர் இவரை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

அனிருத்தை பற்றி சங்கர் கூறும்போது, ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்களை கேட்டேன். அனிருத் இசையில் வெளியான மற்றுமொரு அழகான ஆல்பம். இப்படத்தில் இடம் பெற்ற ‘நீயும் நானும்’, ‘காதல் என்பது மாயவலை’, ‘தங்கமே’ ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது’ என்றார்.

சங்கர் பாராட்டியது அனிருத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அனிருத்துக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

1 2