இந்தியில் டப்பாகும் தனுஷின் புதிய படம்?

» Download This File
தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில், தனுஷ் ரெயில்வே சமையல்காரன் வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரெயிலிலேயே படமாக்கப்ட்டு வருகிறது. இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகவிருக்கும் இப்படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட தற்போது படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷிற்கு, இந்தியிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே, இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட்டால் தேசிய அளவில் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என விரும்பிய படக்குழு, இந்தியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். எனினும், அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

» Download This File