வடிவமைத்த நகைகளை விற்பனை செய்ய இணையதளம் தொடங்கிய தமன்னா |Wholesale jewelry, designed to make the web began Tamanna

 

டோலிவுட் மற்றம் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் தமன்னா, நகை வடிவமைப்பிலும் கலக்குபவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

அந்த வகையில் சமீபத்தில் ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார்.

இந்த நகைகளை விற்பனை செய்வதற்காக www.witengold.com என்ற புதிய இணையதளத்தை தமன்னா தொடங்கியுள்ளார். அட்சய திருதியை விழா நாளை வருவதை முன்னிட்டு இன்றே தமன்னாவின் இணையதளம் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

தனது தந்தை சந்தோஷ் பாட்டியாவுடன் சேர்ந்து இந்த இணையதளத்தை தொடங்கியுள்ள தமன்னா கூறுகையில், எனது தந்தை நகை வியாபாரத்தில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே நகை வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதலில் நான் வடிவமைத்த நகைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் எனது தன்னம்பிக்கை அதிகரித்தது.

எனவே வடிவமைக்கும் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். இன்றைய பெண் தலைமுறையினருக்கு ஏற்றவாறு எனது வடிவமைப்புகள் இருக்கும். நான் வடிவமைக்கும் நகைகள் அழகாகவும், சமகாலத்திற்கு ஏற்றதாகவும், அனைத்து விழாக்களின் போது அணிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.