ஓ காதல் கண்மணி பற்றிய விமர்சனம்: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த மணிரத்னம் |Oh dearest love the criticism: Thanks to the media, said Maniratnam

» Download This File

மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் குறித்து ஆக்கப்பூர்வமாக விமர்சனம் எழுதிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து மணிரத்னம் கடிதம் எழுதியுள்ளார்.

» Download This File

அதில் அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.

இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

‘ஓ காதல் கண்மணி’ படத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

» Download This File