விக்ரமுடன் மோதும் டார்லிங் 2

» Download This File
விக்ரமுடன் மோதும் டார்லிங் 2

கடந்த வருடம் வெளியாகி படங்களில் சூப்பர் ஹிட்டான படம் ‘டார்லிங்’. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும் நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். தற்போது இப்படத்தின் தலைப்பு இன்னொரு படத்தின் வெற்றிக்கு வழி வகுக்க இருக்கிறது.

» Download This File

கலையரசன், ரமீஸ் ராஜா, மாயா, காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ் காந்த், ‘மெட்ராஸ்’ ஜானி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்துக்கு ‘டார்லிங் 2’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘டார்லிங்’ முதல் பாகத்தை தயாரித்த ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சதீஷ் சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு முதலில் ‘ஜின்’ எனப் பெயரிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சதீஷ் சந்திரசேகர் கூறும்போது, ‘இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகதான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே நடிகரோ, அதே இயக்குனராக இருக்கவும் வேண்டாம். முந்தைய பாகத்தின் கதை கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம். ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படத்தும் குழப்பத்தை, நகைச்சுவையுடன், காதலும் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சதீஷ் சந்திர சேகர்.

இந்தக் கதைக்கு ‘டார்லிங் 2’ தலைப்பு நன்றாக இருக்கும் என்பதை படம் பார்த்த ஒரு நொடியில் தீர்மானித்தேன். அக்டோபர் மாதம் 21ம் தேதி வெளிவர உள்ள ‘டார்லிங் 2′ அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடையும் என்பதில் சந்தேகமே இல்லை’ என்றார் ஞானவேல் ராஜா.

இப்படம் வெளியாகும் அதே தேதியில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் வெளியாகவுள்ளது. ‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. இவ்விரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

» Download This File