பொள்ளாச்சியில் விஜய் வசந்த்துடன் டூயட் ஆடிய சிருஷ்டி டாங்கே

» Download This File
பொள்ளாச்சியில் விஜய் வசந்த்துடன் டூயட் ஆடிய சிருஷ்டி டாங்கே

‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’. இதில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சமுத்திரகிகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் நடிக்கிறார்கள்.

» Download This File

இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். ராஜபாண்டி இப்படத்தை இயக்கி வருகிறார். படம் பற்றி இவர் கூறும்போது, ‘என்னமோ நடக்குது படம் எப்படி கதையோடு கமர்ஷியல் கலந்து சொல்லப் பட்டதோ அது மாதிரி ‘அச்சமின்றி’ படமும் அழுத்தமான கதையை உள்ளடக்கியது.

மிகவும் ஸ்பீடான திரைக்கதையாக படம் பரபரப்பாக இருக்கும். சமீபத்தில் விஜய் வசந்த் – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற ‘உன்னை பார்த்ததால பசியே இல்ல…’ என்ற பாடல் காட்சி பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. இது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது’ என்றார்.

» Download This File