விஷ்ணுவுக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரசா | Theresa Kathryn Vishnu couple

விஷ்ணு நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படமும், ‘இன்று நேற்று நாளை’ படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘வீர தீர சூரன்’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் விஷ்ணு.

இப்படத்தை ‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானர் கேத்ரின் தெரசா. இப்படத்திற்குப் பிறகு அதர்வாவுடன் இணைந்து ‘கணிதன்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது விஷ்ணுவுடன் இணைந்து ‘வீர தீர சூரன்’ படத்தில் நடிக்க உள்ளார்.

‘வீர தீர சூரன்’ படத்தை முதலில் சுசீந்திரன் இயக்குவதாக இருந்தது. பின்னர் திடீரென்று சுசீந்திரன் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து தற்போது இப்படத்தை இயக்கும் பொறுப்பை சங்கர் தயாள் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் பற்றிய முழுவிவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.