பாயும் புலியை சவாலுடன் சமாளிக்கும் அசோக் செல்வன்

» Download This File
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சவாலே சமாளி’. இப்படத்தை கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார். பிந்துமாதவி கதாநாயகியாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை நடிகர் அருண்பாண்டியனின் மகள்கள் கவிதாபாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் எஸ்.என்.ராஜாராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 4-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படம் வெளியாகும் நாளில்தான் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படமும் வெளியாகவுள்ளது. ஒரு பெரிய நடிகரின் படத்துடன் சவால் போட்டு வெளியாக முடிவெடுத்துள்ள ‘சவாலே சமாளி’ குழு வெற்றியடையும் என நம்பலாம்.

» Download This File