லாரன்சை பாராட்டிய விஜய்| Vijay Congratulating to Lawrence

ராகவா லாரன்ஸ்-டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘காஞ்சனா 2’. தனது முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் ரொம்பவும் திகில் நிறைந்ததாக இயக்கியிருந்தார் லாரன்ஸ்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதவிர, இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், குழந்தை, பாட்டி உள்ளிட்ட கிட்டத்தட்ட 7 விதமான கெட்டப்புகளில் தோன்றி அனைவரையும் அசர வைத்தார்.

இப்படம் வெளிவரும் முன்பே, இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லாரன்சின் நடிப்பை பார்த்து வியந்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் படம் வெளியாகி மெகா ஹிட் ஆகியுள்ளதையடுத்து, நடிகர் விஜய், ராகவா லாரன்சை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மனதார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய்யும், ராகவா லாரன்ஸும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். நல்ல நண்பரின் பாராட்டால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.