டீன்-ஏஜ் பரு­வமும் மனக்குழப்பமும்

» Download This File

பொது­வா­கவே டீன்-ஏஜ் பரு­வத்தைச் சேர்ந்­த­வர்கள், தன்­னம்­பிக்­கையை குறை­வாகக் கொண்­டி­ருப்­பார்கள். தம்மில் தோற்­றத்தில் நிறைய குறை­களைக் காண்­பார்கள்.

இத்­த­கைய அச்­சங்­களும், ஐயப்­பா­டு­களும் கொண்­ட­வர்­க­ளிடம் பழ­கு­வது சிக்­க­லான காரியம் .சாதா­ர­ண­மாக நாம் சொல்­லு­கிற சொற்­களை திரித்து அர்த்­தப்­ப­டுத்திக் கொள்­கின்ற போக்கு இந்த கால கட்­டத்தில் மிகுந்­தி­ருக்கும்.
ஏறக்­கு­றைய எல்லா உற­வு­மு­றை­யி­ன­ரி­டமும் இந்தக் குள­று­படி இந்­தாலும், பெற்­றோர்க்கும் பிள்­ளை­க­ளுக்கும் இடையில் இப்­ப­டிப்­பட்ட கருத்து முரண்­பாடு ஏற்­ப­டு­மானால், அது இரு­சா­ரார்க்கும் மிகுந்த மன­வே­த­னையை உண்­டாக்கும்.

தன் கட்­ட­ளை­களை பிள்­ளைகள் மீறும்­போது தன் அதி­கா­ரத்­தையே அவர்கள் தட்டிக் கேட்­ப­தாக அப்­பா­வுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்­கிற தன் நிலை­யையே அவர்கள் உதா­சி­னப்­ப­டுத்­து­வ­தாக நினைப்­பீர்கள். ஒரு அப்­பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடி­யாது.

சின்ன வயதில் எந்தப் பெண் குழந்­தையும் தன் அப்­பா­விடம் மிகவும் பாச­மாக இருக்கும். அவரை ஆரா­திக்கும் இந்த பாசத்­திற்கும், ஆரா­த­னைக்கும் பழக்­கப்­பட்­டு­போன ஒரு தந்­தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்­கத்தை எளி­தாக எடுத்துக் கொள்ள முடி­யாது தானே.

தாய்-­மகள் உறவு முறை என்­பது தகப்பன் – மகள் உறவு முறை­யி­லி­ருந்து மிகவும் மாறு­பட்­டது.டீன் -ஏஜ் பரு­வத்தில் எந்த ஒரு பெண் பிள்­ளையும் தன் தாயிடம் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்தி கொள்­வது இயல்பு.

தந்­தை­யுடன் பகிர்ந்­துக்­கொள்ள இய­லாத அச்­சங்­க­ளையும், ஐயப்­பா­டு­க­ளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்­கிறாள்.
தாயுடன் ஒட்­டு­த­லாக இருக்­கின்ற மகள் தன்­னுடன் அப்­படி இல்­லையே என்று தந்தை ஏங்­கு­கிறார். விலக்கி வைக்­கப்­பட்­டது போல் உண­ரு­கிறார். இன்­னொரு கருத்து கூட இதை மேலும் சிக்­க­லாக்­கு­கின்­றது.

கண்­ணோட்­டத்தில், பார்­வையில், தம் மகள் எப்­பொ­ழுதும் குழந்­தை­யா­கவே தென்­ப­டு­கிறாள். அவள் வளர்ந்து கொண்­டி­ருக்­கிறாள் என்­பதை உணரத் தவறி விடு­கிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்­வொரு புதிய பழக்­கமும் – மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்­தி­ருக்கும் படி­மத்­திற்கு முர­ணாக இருப்­பதால் அவரை வெறுப்­பேற்­று­கி­றது.
இந்த சூழ்­நி­லையில் தாய் என்­கிற முறை­யிலும் மனைவி என்­கிற முறை­யிலும் பெண்­க­ளுக்கு பெரிய கவலை ஏற்­படும், சச்­ச­ர­வு­களை தவிர்க்கும் பொருட்டு, அப்­பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்­வ­தையும் தவிர்க்கத் தொடங்­குவர்.

வீடே ஒரு போட்டிக் கள­மாகக் காட்­சி­ய­ளிக்கும்.
“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் 14வயது மக­ளுக்கும். குடும்­பத்தை தன் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க முனையும் அப்­பா­வுக்கும் இடையில் நடக்­கின்­றன போட்டி, வீட்டை நின்மதியற்றதாக்கிவிடும்.

» Download This File

இவர்கள் இரு­வ­ருக்கும் நடுவில் ஒரு சமா­தான உடன்­ப­டிக்­கையை ஒரு பெண்ணால் தாயால் ஏற்­ப­டுத்த முடி­யுமா?
அப்­பா-தன் மக­ளிடம் அவ்­வ­ளவு கோபம் கொள்­வ­தற்­கான காரணம் என்ன என்­பதைக் கண்­டு­பி­டி­யுங்கள். குறிப்­பாக எதைப் பற்றி அவர் நச்­ச­ரிக்­கிறார்? அது புதி­தாக உரு­வான ஒன்றா? அல்­லது அப்பா மக­ளிடம் நெடுங்­கா­ல­மா­கவே குறை காணும் அம்­சமா?

குடும்ப உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் கூட்­டுங்கள் குடும்­பத்­தினர் அனை­வரும் கட்­டாயம் கலந்துக் கொள்ள வேண்­டு­மென வலி­யு­றுத்­துங்கள். ஒவ்­வொ­ருத்­தரும் எந்த குறுக்­கீ­டு­மின்றி ஐந்து நிமிடம் பேச வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுங்கள்.

தங்கள் மனதின் மனக்­கு­றைகள் பற்­றியும் அவற்­றுக்­கான மூல காரணங்கள் பற்றியும் விளக்கச் சொல்லத் தூண்டுங்கள்.

“ நம் உணர்வுகளை நம் குடும்பத்தினர் அனைவரும் செவிமடுத்து கேட்கிறார்கள்” என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத குடும்ப உறுப்பினர்களும், இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

teenage-hot-wallpapers156

» Download This File