கொம்பன் பட இயக்குனருடன் இணையும் விஷால் | Komban combined with filmmaker Vishal

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சூரி காமெடி கதாபாத்திரத்திலும் நிகிதா ஒரு பாடலுக்கும் வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கொம்பன்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாமனார் மருமகனுக்கிடையேயான உறவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷாலை வைத்து படம் இயக்கவுள்ளார் முத்தையா. இவர்கள் இணையும் புதிய படம் அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.