பாயும் புலியுடன் இணையும் ரஜினிமுருகன்

பாயும் புலியுடன் இணையும் ரஜினிமுருகன்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாயும் புலி’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 4ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

‘பாயும் புலி’ வெளியாகும் திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் யூடியூப்பில் ‘ரஜினி முருகன்’ டிரைலரை செப்டம்பர் 3ம் தேதி நள்ளிரவு வெளியிட இருக்கின்றனர்.

‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.