குட்டி தலக்கு ஆத்விக் என பெயர் வைத்த அஜித் |actor ajith son name choosing aatvik

» Download This File
அஜித்-ஷாலினி தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சென்னை தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு அஜித் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் இந்த குழந்தைக்கு ‘குட்டி தல’ என செல்லமாக பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.இந்நிலையில், சமீபகாலமாக இக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற தீவிர யோசனையில் அஜித்-ஷாலினி தம்பதியினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அக்குழந்தைக்கு ஆத்விக் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். ஆத்விக் என்றால் ‘தனிப்பட்ட’ என்று பொருள்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய முதல் பெண் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

» Download This File

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும், இவருக்கு தங்கை வேடத்தில் நடிகை லட்சுமிமேனன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

» Download This File