நிறைய ஆண்களை ஏமாற்றி உள்ளேன்: லட்சுமிமேனன் | I have a lot of cheating mens: lashmi menon

» Download This File

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா என தொடர் ஹிட் படங்களில் லட்சுமிமேனன் நடித்துள்ளார். கார்த்தியுடன் நடித்து சமீபத்தில் ரிலீசான கொம்பன் படமும் வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது சிப்பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் பிளஸ்–2 தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காகவும் காத்து இருக்கிறார்.

லட்சுமிமேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

நான் திருமணத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லை. இப்போதைக்கு நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். தனியாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நிறைய ஆண்களை நான் ஏமாற்றி இருக்கிறேன். எனவே காதல் கல்யாணம் போன்ற உறவுகளுக்கு நான் தகுதி இல்லை என்று கருதுகிறேன். விஷாலும் நானும் நல்ல நண்பர்கள்.

» Download This File

எல்லா விஷயங்களையும் அவரிடம் மனம் விட்டு பேசுவேன். எல்லா படங்களிலும் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து இருக்கிறேன். டைரக்டர்கள் அதுமாதிரி கேரக்டர்களில் நடிக்கவே என்னை அணுகுகின்றனர்.

நான் சினிமாவை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. கொஞ்சம் ஓய்வு வேண்டும். அதன் பிறகு மீண்டும் நடிப்பேன். பாரிசுக்கு சுற்றுப்பயணம் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். அடுத்து அஜீத் படத்தில் அவரது தங்கையாக நடிக்க என்னிடம் கேட்டுள்ளனர்.

இவ்வாறு லட்சுமிமேனன் கூறினார்.

» Download This File