சினிமா பிரபலங்களை கவர்ந்த டப்ஸ் மாஷ் அப்|mashup has attracted celebrities from film mas

மாஷ் அப் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன டப்ஸ் மாஷ் அப்? இதுதான் தற்போது இணையதளங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டப்ஸ் மாஷ் அப் என்பது ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் ஒரு அப்ளிகேஷன் ஆகும்.

இதை, ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டால், இதில் நிறைய ஆடியோக்கள் வரும். அதில், நமக்கு தேவையான ஆடியோவை தேர்வு செய்து அந்த ஆடியோவுக்கு ஏற்ற மாதிரி நம்முடைய அங்க அசைவுகளை வீடியோவாக பதிவு செய்யலாம்.

இந்த டப்ஸ் மாஷ் அப் வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். இது தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. நிறைய பேர் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து அதில் தங்களுக்கு பிடித்த வசனங்களை தேர்வு செய்து, தங்களது முகபாவனைகளுடன் கூடிய விடியோவை பதிவு செய்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த டப்ஸ் மாஷ் அப்பை கொண்டாடி வருகிறார்கள். சிம்பு, விஷால், சூரி, பிரேம்ஜி அமரன், இசையமைப்பாளர்கள் அனிருத், டி.இமான், நடிகை ராதிகா சரத்குமார், வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலரும் இந்த டப்ஸ் மாஷ் அப்பில் இணைந்து தங்களது பிடித்தமான நடிகர்களின் வசனங்களுக்கு தங்களது வீடியோவை பதிவு செய்துள்ளனர். இவர்களது வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் சக்கை போடு போட்டு வருகின்றன.