எம்.எல்.ஏ ஆகிறார் ‘மெட்ராஸ்’ நடிகை

 

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தின் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை கேதரின் தெரசா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரம்மாதேவி’ சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

தமிழில் தற்போது கணிதன், வீர தீர சூரன், விஷால்-பாண்டியராஜ் படம் போன்ற படங்களில் இவர் நடித்து கொண்டிருக்கும் நிலையில் புதிய தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அல்லு அர்ஜூன், ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கேதரீன் தெரசா எம்.எல்.ஏ வேடத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் இவருடைய எம்.எல்.ஏ கேரக்டர் மிகவும் இயல்பான வித்தியாசமான கேரக்டர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தமன் இசையமைத்து வரும் இந்த படம் 2016ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.