ரஜினி தலைப்பை கைப்பற்றிய விக்ரம் பிரபு | Vikram Prabhu captured Rajini title

‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் வெளியாக உள்ள இப்படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கு ‘தனிகாட்டு ராஜா’ என பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பில் ஏற்கனவே ரஜினிகாந்த் படம் வெளியாகியுள்ளது. 1982ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.