அச்சமின்றி படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சமுத்திரகனி | The crew celebrated the birthday with fear camuttirakani

» Download This File

‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய தரமான படங்களை தந்தவர் இயக்குனர் சமுத்திரகனி. இயக்குனராக பளிச்சிட்டாலும், தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘சாட்டை’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தற்போது இவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. மேலும், படங்களை இயக்கும் பணியையும் விடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், சமுத்திரகனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் ‘அச்சமின்றி’ படக்குழுவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

’அச்சமின்றி’ படத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‘என்னமோ நடக்குது’ படத்தை இயக்கிய ராஜபாண்டி இயக்கிவருகிறார். இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

» Download This File

சமுத்திரகனியின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

» Download This File