இரண்டாவது முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ஷாருக்கான்

» Download This File
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் இரண்டாவது முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் கடந்த வியாழனன்று இந்தப் பட்டத்தை வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி ஷாருக்கான் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னர் விரிவுரை ஆற்றியுள்ளார். எடின்பர்க் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, தனது வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி ஷாருக்கான் விரிவுரையாற்றினார். இதில், ‘வாழ்க்கை ஒரு அதிசயம்’ எனவும், அதில் தான் நிறைய கற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விரிவுரை நேரடியாக பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் ஒளிப்பரப்பப்பட்டது.

ஏற்கனவே இங்கிலாந்தின் லூட்டான் நகரத்திலுள்ள பெட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகம் ஷாருக்கானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

» Download This File