தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்த தாரை தப்பட்டை பயணம்

» Download This File
தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்த தாரை தப்பட்டை பயணம்

‘பரதேசி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா, சசிகுமார்-வரலட்சுமியை வைத்து ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இது, இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படமாகும்.

» Download This File

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 1 வருட காலமாக பல கட்டங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது, இந்த படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.

கடைசியாக தஞ்சாவூரில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர். முதலில் இப்படத்தை தொடங்கியதும் தஞ்சாவூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஒரு பாடலுக்காக படக்குழுவினர் வெளிநாடுகூட சென்று வந்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் களமிறங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த வருடத்தின் இறுதியில் படம் வெளியாகும் என தெரிகிறது. வரலட்சுமி இந்த படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி, குறைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

» Download This File