கேரளாவில் நடிகை பானு திருமண வரவேற்பு: நடிகர்–நடிகைகள் வாழ்த்து

» Download This File
கேரளாவில் நடிகை பானு திருமண வரவேற்பு: நடிகர்–நடிகைகள் வாழ்த்து

‘தாமிரபரணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை பானு. மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் நடித்து வருகிறார். இவருக்கும் மலையாள பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்குடோமிக்கும் காதல் மலர்ந்தது. இதுபற்றி பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

கடந்த 23–ந்தேதி இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. நேற்று கொச்சி இடப்பள்ளியில் உள்ள புனித ஜார்ஜ் ஆலயத்தில் திருமணம் நடந்தது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.

மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்– நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர்கள் திலீப், காவ்யாமாதவன், லால்ஜோஷ், விஷ்ணுபிரியா, சரயூ, பாமா, கோவிந்த் பத்மசூர்யா, பீனாஆன்டணி, சுபி, ரம்யா நம்பீசன், டைரக்டர் சித்திக், பிரியங்கா, நஜீம் ஹர்சத் உள்பட பலர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக கேரள கிறிஸ்தவர்கள் திருமணத்தின் போது நடைபெறும் பாரம்பரிய மார்கம்– களி நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மணமக்கள் இருவரும் கேரள கலாச்சார உடையணிந்திருந்தனர்.

» Download This File

நடிகை பானு தமிழில் ‘அழகர்மலை’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படங்களிலும் நடித்துள்ளார்.

» Download This File
1 2