இறுதி கட்ட படப்பிடிப்பில் பெங்களூர் டேஸ் ரீமேக்

» Download This File
இறுதி கட்ட படப்பிடிப்பில் பெங்களூர் டேஸ் ரீமேக்

மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகிறது. ‘36 வயதினிலே’, ‘பாபநாசம்’ ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றி பெற்றுள்ளன.

அந்த வரிசையில் மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் ரீமேக்கில் ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பாஸ்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று இறுதிநாள் படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.

» Download This File

இப்படத்திற்கு ‘அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்’ என்ற பெயரை சுருக்கி ADMK என்று தலைப்பு தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் தலைப்பு உறுதி செய்யப்படாத நிலையில் இருப்பதால் விரைவில் தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட இருக்கின்றனர்.

» Download This File