மாஸ் பட பின்னணி இசையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் யுவன் | Mass will be busy in the background music of Yuvan

» Download This File

யுவன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் சூர்யா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, ஜெயராம், கருணாஸ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

» Download This File

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தின் இசையை கவனித்து வரும் யுவன் சங்கர் ராஜா, தற்போது பின்னணி இசை சேர்ப்பு வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். மேலும் இவர் அமைத்து வரும் இந்த பின்னணி இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இசையின் பின்னணி வேலைகள் முடிந்த பிறகு விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். மாஸ் படத்தை வருகிற மே 15-ம் தேதி வெளியிடுவதுதாக ஏற்கெனவே படக்குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

» Download This File