பாகுபலி மூன்றாம் பாகம் உருவாகும்: ராஜமௌலி உறுதி

பாகுபலி மூன்றாம் பாகம் உருவாகும்: ராஜமௌலி உறுதி
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா என பலருடைய நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’, 100 நாட்களை கடந்து சுமார் ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜமௌலி ‘பாகுபலி’ படத்தை மூன்றாவது பாகமாகவும் எடுக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

ஆனால், ‘பாகுபலி’ படத்தின் கதையையே மூன்றாம் பாகமாக இழுக்கப்போகிறரா? அல்லது புதிய கதையாக எடுக்கப் போகிறாரா? என்று ரசிகர்களுக்கு ரொம்பவும் குழப்பமாக இருந்தது. ஆனால், திடீரென்று ராஜமௌலி, மூன்றாம் பாகம் எடுப்பதை குழப்பத்துடன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த குழப்பத்திற்கு இன்று ராஜமௌலி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பாகுபலி 3-ம் பாகம் குறித்து தெளிவான விவரத்தை அளிப்பதற்கு பதிலாக நானே குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் போலிருக்கிறது, மன்னிக்கவும்.

‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்கும் எண்ணம் உள்ளது. ஆனால், இதற்காக ‘பாகுபலி’யின் இரண்டு பாகங்களுக்காக எழுதிய கதையை மூன்றாம் பாகத்திலும் இழுக்க மாட்டோம். இந்தக் கதை இரண்டாம் பாகத்துடனேயே முடிந்துவிடும்.

‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் இதுவரை நீங்கள் அனுபவித்திருக்காத விதத்தில் அமையும். இப்போது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்,” என கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது ‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் வேறு ஒரு கதையுடன் உருவாக வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.

1 2 3 9