கேரளாவில் தொடங்கியது பாகுபலி-2 படப்பிடிப்பு

» Download This File

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள அதிராபள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பிரபாஸ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.

» Download This File

முதல் பாகத்தில் தமன்னாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கியிருந்தார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவிற்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரட்டிப்பு பிரம்மாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

» Download This File