400 ஏழை குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றார் லாரன்ஸ்

» Download This File
400 ஏழை குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றார் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிப்புடன் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதிலும் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார்.

சமீபத்தில் அவர் இயக்கி நடிக்கும் 2 புதிய படங்களுக்காக கிடைத்த ரூ.1 கோடியை, இளைஞர்களுக்காக வழங்கினார். 100 இளைஞர்களிடம் இந்த பணத்தை கொடுத்து அவர்கள் மூலம் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்தார்.

» Download This File

இப்போது 400 ஏழை குழந்தைகளை தேர்வு செய்து, எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை அவர்களுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக சென்னையில் 200 ஏழை குழந்தைகளை தேர்வு செய்கிறார். அவர்களை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.

வெளியூர்களில் தேர்வு செய்யப்படும் 200 ஏழை மாணவ–மாணவிகளுக்கு அந்த பள்ளியின் கிளைகள் உள்ள வெளியூர்களில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது ‘இந்த 400 குழந்தைகளும் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை படிக்கும் அனைத்து கட்டணத்தையும் தனது ‘லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்’ அறக்கட்டளை செலுத்தும் என்று கூறினார்.

» Download This File