ரசிகர்களை கவர்ந்த மாஸ் டீஸர் | Masss audiences are attracted teaser

ஒன்றரை நிமிடங்கள் ஓடக் கூடிய மாஸ் டீஸரை வெளியிட்டுள்ளனர். பெயருக்கேற்ப மாஸாக உள்ளது டீஸர்.

வெங்கட்புரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணித்தா நடித்துள்ள இந்தப் படம் ஆக்ஷனா, காமெடியா, ரொமான்ஸா இல்லை எல்லாம் கலந்ததா? படக்குழு சொல்வது போல் ஃபேண்டஸி கலந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லரா என்ற குழப்பமான கேள்வி அனைவரிடமும் உள்ளது.

அதற்கு விடை தருவதற்குப் பதில் கேள்வியின் வீரியத்தை அதிகப்படுத்துவது போல் அனைத்து அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது இந்த டீஸர். மேலே உள்ள அனைத்தும் இந்த டீஸரில் இடம்பெற்றிருப்பதுதான் இதன் சிறப்பு.

முக்கியமாக ட்ராகுலா கெட்டப்பில் சுவரில் தலைகீழாக நடக்கிறார் சூர்யா. அஞ்சான் தோல்வியிலிருந்து மீள மாஸ் சூர்யாவுக்கு தோள் கொடுக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஒன்றரை நிமிட டீஸரின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார், வெங்கி.

சாதனைதான்.