இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ்பாபு

இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ்பாபு

மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்ரீமந்துடு’. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். மகேஷ் பாபுவே தயாரித்த இப்படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்னும் பெயரில் டப் செய்து வெளியானது.

இப்படம் வெற்றியடைந்ததால் மகிழ்ச்சியான மகேஷ்பாபு இப்படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவாவிற்கு போன் செய்து ஆடி ஷோரூமிற்கு வரும்படி அழைத்திருக்கிறார். என்னவென்று தெரியாமல் வந்த சிவாவிற்கு மகேஷ்பாபு வெள்ளை நிற ஆடி காரை பரிசளித்திருக்கிறார்.

திடீரென மகேஷ் பாபு போன் செய்து ஆடி காரை பரிசளித்தது கொரட்டலா சிவாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் மகேஷ்பாபுவின் இந்த பரிசு அவரது அன்பையும் பெருந்தன்மையையும் உணர்த்தியதாக கொரட்டலா சிவா கூறியிருக்கிறார்.

ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை வளமாக்குவதையே ‘ஸ்ரீமந்துடு’ படத்தின் கதையாக உருவாக்கியிருந்தார்கள். சமீபத்தில் ஆந்திர முதல்வர் இப்படத்தை பார்த்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.