ஜெமினி கணேசனும் சுருளி ராஜனுமாகிய கலையரசன்

» Download This File
ஜெமினி கணேசனும் சுருளி ராஜனுமாகிய கலையரசன்
‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்தவர் கலையரசன். இந்த படத்தில் இவரது நடிப்பு ரொம்பவும் பேசப்படவே, தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வரிசையில் தற்போது ‘டார்லிங்-2’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

» Download This File

தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கலையரசன், பழம்பெரும் நடிகர்களான காதல் மன்னன் ஜெமினி கணேசன், நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் ஆகியோர் பெயரை வைத்து உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இளவரசு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படம் தலைப்புக்கேற்றார்போல், ரொமான்ஸ் மற்றும் காமெடியாக உருவாகவிருக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், கூடுதல் தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

» Download This File
1 2