கவுண்டமணியுடன் நடிக்க வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

கவுண்டமணியுடன் நடிக்க வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் ’49 ஓ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சத்யராஜ் கலந்து கொண்ட இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:–

கவுண்டமணி சார்தான் எங்களைப் போன்ற பலருக்கு ரோல் மாடல். இப்போதும் அனைவராலும் விரும்பப்படும் நடிகர் அவர்தான். நான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த போது, சத்யராஜ் சாரிடம் கவுண்டமணி சார் சொன்ன கிண்டல் பேச்சை கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். இப்போது நினைத்தாலும் அவை சிரிப்பை வரவழைக்கும்.

அவரிடம் பேசும்போது, ‘உங்களுடைய காமெடிகள் எங்களுக்குள்ளேயே இருக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ அதை திருடிக்கிட்டு தான் இருக்கோம்’ என்றேன். அதற்கு கவுண்டமணி சார், ‘அட… இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதான்ப்பா’ என்று சாதாரணமாக கிண்டல் அடித்தார். என்னுடைய ஆசை இதுதான். சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் முடிந்தால், அதில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டும்.

’49 ஓ’ அரசியல் கலந்த விவசாயம் பற்றிய படம் இதை காமெடி கலந்து சொல்ல கவுண்டமணி சாரால் மட்டும்தான் முடியும். அவரை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. இனிமேலும் இல்லை. மீண்டும் திரைப்படத்தில் அவரை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.

உங்களை சந்திக்க எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சிவபாலனுக்கு நன்றி. நான் கவுண்டமணி சார் போல பேச வேண்டும் என்று கூட்டத்தில் இருந்து கேட்கிறார்கள். அப்படி பேசினால், ‘அதுக்குத்தான் நான் இருக்கேன்னு, அவன் என்ன பேசுறது என்று கவுண்டமணி சார் சொல்லிடுவாரு’ என்று கூறினார்.