ஜீவாவுக்கு சிபாரிசு செய்த ஆர்யா

» Download This File
ஜீவாவுக்கு சிபாரிசு செய்த ஆர்யா
ஆர்யா- அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ். பிரகாஷ் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகியுள்ளது.

» Download This File

தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தில் நாகார்ஜூனா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் யாரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கலாம் என யோசித்த போது, ஜீவாவை நடிக்க வைக்கலாம் என இயக்குனருக்கு ஆர்யா சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஆர்யா நடிப்பில் உருவான “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ஜீவா கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் அதுபோல் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசில சக்தி’ படத்தில் ஆர்யா கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை வெளியீடு தமிழில் அக்டோபர் 9-ம் தேதியும், தெலுங்கில் நவம்பர் 1-ம் தேதியும் வெளியிட இருக்கின்றனர். நவம்பர் 27-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

» Download This File
1 2 3 19