அருண் விஜய்யை இயக்கும் கௌதம் வாசுதேவ மேனன் | Arun Vijay directed by Gautham Menon

என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் நடித்த பிறகே அருண் விஜய்யின் பெயருக்கு விளம்பர வெளிச்சம் கிடைத்தது. அதற்காக கௌதம் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறார் அருண் விஜய். கௌதம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்.

அதற்கேற்ப, அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்று சினிமா விழாவில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் கௌதம்.

முழுமையான ஸ்கிரிப்ட் தயார் செய்யாமல் படப்பிடிப்புக்கு கிளம்பி, தோன்றியதை எடுத்து, வாய்ஸ் ஓவரில் மேட்ச் செய்யும் வியாதி கௌதமுக்கு தீவிரமடைந்ததால்தான் அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. துருவநட்சத்திரம் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக தயாராகாததால்தான் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார்.

என்னை அறிந்தால் அஜீத்துக்காக ஜஸ்ட் பாசாகிய படம். கௌதம் அதையும் குதறிதான் வைத்திருந்தார். அஜீத் படத்துக்கே ஸ்கிரிப்ட் இல்லாமல் சென்றவர், அருண் விஜய் படத்துக்கு மட்டும் கதையுடனா செல்லப் போகிறார்?