ரஜினி படத்தில் அர்னால்டு

ரஜினி படத்தில் அர்னால்டு

‘எந்திரன்’ படம் 2010–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார். ஷங்கர் இயக்கினார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. திரைக்கதை உருவாக்குதல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

பிரம்மாண்டம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. ரூ. 250 கோடி செலவில் இந்த படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய படங்களில் அதிக பட்ஜெட் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் இன்னொரு முன்னணி நடிகர் நடிப்பார் என பேசப்பட்டது. அந்த கேரக்டருக்கு கமலஹாசன், அமீர்கான், விக்ரம் என பெயர்கள் அடிபட்டன. இறுதியாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது அர்னால்டு பங்கேற்றார். அப்போது மேடையிலேயே தமிழ் படத்தில் நடிக்க ஷங்கர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே எந்திரன் 2–ல் ரஜினியுடன் நடிக்க அர்னால்டை அணுகியுள்ளனர். ரஜினிக்கு இணையான கேரக்டராக அர்னால்டு பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

1 2