தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அரவிந்தசாமி?

» Download This File

» Download This File

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாலாவின் அடுத்த பட அறிவிப்புகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
யாரும் எதிர்பாராத வகையில் பாலாவின் அடுத்த படத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்தசாமியின் மிரட்டலான நடிப்பை பார்த்த பாலா, தனது அடுத்த படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்பட பாலாவின் நாயகர்கள் அனைவருக்கும் வித்தியாசமான கெட்டப்பை செலக்ட் செய்த பாலா, அரவிந்தசாமிக்கு என்னவிதமான கெட்டபை கொடுக்க போகின்றார் என்பதை அறிய கோலிவுட் திரையுலகமே காத்திருக்கின்றது.

» Download This File