பாலா இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி

» Download This File
பாலா இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி?

பாலா இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தாரை தப்பட்டை’.  இதில் சசிகுமார் நாயகனாகவும் வரலட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பாலா தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். விக்ரம், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘கூட்டாஞ்சோறு‘ என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வந்தன. தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அரவிந்தசாமி நடிக்கவுள்ள புதிய படத்தை பாலா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

» Download This File

சமீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்‘ படத்தில் வில்லனாக நடித்த அரவிந்தசாமியின் அலட்டிக்கொள்ளாத அருமையான நடிப்பை பார்த்து பாலா இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

» Download This File
1 2